திருகோணமலையில் மாலை 6 மணிக்கு பிறகு பிரத்தியேக வகுப்புக்களுக்குத் தடை

திருகோணமலையில் மாலை 6 மணிக்கு பிறகு பிரத்தியேக வகுப்புக்களுக்குத் தடை

திருகோணமலையில் மாலை 6 மணிக்கு பிறகு பிரத்தியேக வகுப்புக்களுக்குத் தடை

எழுத்தாளர் Staff Writer

29 May, 2014 | 9:48 am

திருகோணமலை நகர எல்லைக்குள் செயற்படும் தனியார் கல்வி நிலையங்கள் மாலை 6 மணிக்குப் பின்னர் பிரத்தியேக வகுப்புக்களை நடத்தக் கூடாதென நகர சபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நேற்று நடைபெற்ற நகர சபைக் கூட்டத்தில் நகர சபை உறுப்பினர் சத்தியசீலராஜா இந்தப் பிரேரணையை கொண்டுவந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

மாணவர்களின் நலன்கருதி இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்மானத்தை மீறும் கல்வி நிலையங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதிப் பத்திரங்களை இரத்துசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை நகர சபை அறிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்