ஜனாதிபதி மோடியுடன் முறுகல் இன்றி செயற்படுவார் – கலாநிதி விக்ரமபாகு கருணாரத்ன (Video)

ஜனாதிபதி மோடியுடன் முறுகல் இன்றி செயற்படுவார் – கலாநிதி விக்ரமபாகு கருணாரத்ன (Video)

எழுத்தாளர் Staff Writer

29 May, 2014 | 8:29 pm

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ எவ்வேளையிலும் மோடியுடன் முறுகல் இன்றி செயற்படுவாரென கலாநிதி விக்ரமபாகு கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

[quote]ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ எவ்வேளையிலும் மோடியுடன் முறுகல் இன்றி செயற்படுவார், விமல் வீரவங்சவிற்கு அரசாங்கத்துடன் இருக்க முடியாமல் போகும். இன்று கூறும் விடயங்களைப் பார்க்கும்போது அவருக்கு வெட்கம் இருக்கிறதா இல்லையா என்பது தெரியவில்லை. வெட்கம் இருந்தால் வீதிக்கு இறங்க வேண்டும். [/quote]

இந்த ஊடக சந்திப்பில் இளைஞர் விவகாரம் மற்றும் திறன் விருத்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும கருத்து வெளியிட்டார்.

[quote] ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி என்ற வகையில் இலங்கை இந்திய உறவுகள் தொடர்பில் விசேடமாக அவதானம் செலுத்துமாறு நாம் அழைப்பு விடுக்கின்றொம்.  சிலவேளை இந்த நாட்டில் உள்ள சில அரசியல் கட்சிகளுக்கு இந்திய விவகாரம் பெரிதாக தெரிகிறது. அதேபோன்று இந்தியாவிற்கு எதிரான குழுவொன்றும் உள்ளது.  எனவே இந்திய இலங்கை உறவுகளில் இதுவொரு முக்கியமான கட்டமாகும். இலங்கை தரப்பில் நோக்கும் போது இலங்கையில் பலமான ஓர் அரசாங்கம் உள்ளது. இந்திய தரப்பில் நோக்கும் போது 30 வருடங்களின் பின்னர் பலமான ஓர் அரசாங்கம் உருவாகியுள்ளது.  எனவே இந்த இரண்டு பலமான அரசாங்கங்களின் உறுதிமிகு இரண்டு அரச தலைவர்களுக்கும் நாம் வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றோம். எனவே சினேகபூர்வமான உறவுகள் இரு நாடுகளுக்கும் இடையில் தொடரும் வகையில் நாம் செயற்படுவோம். [/quote]


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்