சப்ரகமுவ மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபை தலைவருக்கு விளக்கமறியல்

சப்ரகமுவ மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபை தலைவருக்கு விளக்கமறியல்

சப்ரகமுவ மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபை தலைவருக்கு விளக்கமறியல்

எழுத்தாளர் Staff Writer

29 May, 2014 | 12:21 pm

சப்ரகமுவ மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சட்டவிரோதமாக தயார்செய்யப்பட்ட ஆவணங்களைப் பயன்படுத்தி, ஜீப் வண்டியை விற்பனைசெய்த குற்றச்சாட்டில், அவர் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

குறித்த ஜீப் வண்டி 38 இலட்சம் ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

திடீர் விபத்துக்குள்ளான வாகனம், திருத்தப் பணிகளுக்கான திருத்துமிடமொன்றிற்கு அனுப்பிவைக்கப்பட்ட சந்தர்ப்பத்தில், அதன் பதிவுப் புத்தகம் போலியானது என்பது கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் வாகன திருத்துமிடத்தில் பணியாற்றும் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் இருவரும் எதிர்வரும் ஜூன் மாதம் 02 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்