சத்தியாகிரக போராட்டத்தை தொடர இணை சுகாதார பீட மாணவர்கள் தீர்மானம்

சத்தியாகிரக போராட்டத்தை தொடர இணை சுகாதார பீட மாணவர்கள் தீர்மானம்

சத்தியாகிரக போராட்டத்தை தொடர இணை சுகாதார பீட மாணவர்கள் தீர்மானம்

எழுத்தாளர் Staff Writer

29 May, 2014 | 10:04 am

தமது சத்தியாகிரக போராட்டத்தினை தொடர்ந்தும் முன்னெடுக்கவுள்ளதாக இணை சுகாதார பீட மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

04 வருடகால இணை சுகாதார பட்டப் படிப்பினை முடக்க வேண்டாமென அதிகாரிகளிடம் முன்வைத்த கோரிக்கைக்கு இதுவரை உரிய பதில் கிடைக்கவில்லை என அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

இதற்கமைய, கொழும்பு கோட்டை உள்ளிட்ட 04 இடங்களில் ஆரம்பித்துள்ள சத்தியாகிரக போராட்டத்தினை தொடர்ந்தும் முன்னெடுக்கவுள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் இணை சுகாதார பீடத்தின் மாணவர் சங்கத்தின் தலைவர் ரஜித்த பிரசாத் கூறினார்.

பேராதனை, கொழும்பு, ஸ்ரீ ஜயவர்த்தனபுர, ருகுணு, யாழ்ப்பாணம், கிழக்கு பல்கலைக்கழகம் ஆகியவற்றின் இணை சுகாதார பீட மாணவர்கள் 159 நாட்களாக வகுப்பு பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, பரீட்சைக்குத் தோற்றாத மாணவர்கள் சித்தியடையத் தவறியதாக கருதப்படுவார்கள் என பேராதனை பல்கலைக்கழக அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.

எவ்வாறாயினும், இணை சுகாதார பீடத்தில் நான்கு வருடகால பட்டப்படிப்பினை பல்கலைக்கழகங்களில் மீள ஆரம்பிக்கும் வரையில், எந்தவொரு பரீட்சைகளிலும் கலந்துகொள்ளப் போவதில்லை என மாணவர் சங்கத்தின் தலைவர் ரஜித்த பிரசாத் கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்