கடலுக்கு அடியில் இருந்து வந்த சமிக்ஞை மாயமான விமானத்தினுடையது அல்ல – அமெரிக்கா

கடலுக்கு அடியில் இருந்து வந்த சமிக்ஞை மாயமான விமானத்தினுடையது அல்ல – அமெரிக்கா

கடலுக்கு அடியில் இருந்து வந்த சமிக்ஞை மாயமான விமானத்தினுடையது அல்ல – அமெரிக்கா

எழுத்தாளர் Staff Writer

29 May, 2014 | 4:25 pm

கடலுக்கு அடியில் இருந்து வந்த சமிக்ஞை காணாமல் போன மலேஷிய விமானத்தின் உடையது அல்லவென அமெரிக்கா தெரிவித்துள்ளது.

மனிதனால் தயாரிக்கப்பட்ட வேறு ஒன்றில் இருந்து இந்த சமிக்ஞை வெளியாகியிருக்கலாம் என அமெரிக்க கடற்படையின் சமுத்திர பொறியியல் தொடர்பான பிரதிப் பணிப்பாளர் மிச்செல் டீன் கூறியுள்ளார்.

229 பேருடன் கோலாம்பூரில் இருந்து பீஜிங் நோக்கிப் பயணித்த மலேஷியப் பயணிகள் விமானம் கடந்த மார்ச் மாதம் ​8ஆம் திகதி காணாமல் போயிருந்தது.

குறித்த விமானத்தின் பயணம் இந்து சமுத்திரக் கடற்பரப்பில் முடிவுக்கு வந்ததாக செய்மதித் தரவுகளின் பிரகாரம் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இந்த விமானம் தொடர்பான தகவல்கள் இதுவரை தெரியவரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்