English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
29 May, 2014 | 1:12 pm
Facebook ஊடாக சமூக சீர்கேடுகள் இடம்பெறுவதாகவும் அதனை முடக்க வேண்டுமெனவும் பரவலாக கருத்துகள் வெளியிடப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இந்த கருத்திற்கு எதிர்மாறான நன்மை பயக்கும் விடயமொன்று கனடா கியூபெக் நகரில் இடம்பெற்றுள்ளது.
புதிதாக பிறந்த குழந்தையை வைத்தியசாலையில் இருந்து கடத்திய பெண்ணை Facebook உதவியுடன் கனேடிய பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
விக்டோரிய என்ற பெண், கடந்த திங்கட் கிழமை குழந்தையை கடத்திச் சென்றுள்ளார்.
வைத்தியசாலையில் பொறுத்தப்பட்டிருக்கும் பாதுகாப்பு கமராவில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
கமராவில் பதிவாகிய காட்சியிலிருந்து பெறப்பட்ட புகைப்படத்தை பொலிஸார் Facebook தளத்தில் தரவேற்றி, குழந்தை காணாமல்போன தகவலையும் பதிவுசெய்தனர்.
இந்த தகவலை ஆயிரக்கணக்கான Facebook பாவனையாளர்கள் பகிர்ந்து கனேடிய பொலிஸாருக்கு உதவியுள்ளனர்.
இந்நிலையில் பேஸ்புக் பதிவுக்கு அமைய சந்தேகநபரான, குழந்தையை கடத்திய பெண்ணின் அயல்வீட்டினர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
குறித்த தகவலுக்கு அமைய பொலிஸார் பெண்ணை கைதுசெய்ததோடு குழந்தையையும் மீட்டுள்ளனர்.
குழந்தையை மீளப் பெற்றுக்கொண்ட பெற்றோர் கனேடிய பொலிஸார் மற்றும் Facebook தளத்திற்கு தமது நன்றிகளை தெரிவித்துக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளனர்.
28 May, 2022 | 08:40 PM
28 May, 2022 | 06:10 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS