இலங்கையர் மூவரை நாடு கடத்திய மலேஷியாவிற்கு சர்வதேச அமைப்புகள் கண்டனம்

இலங்கையர் மூவரை நாடு கடத்திய மலேஷியாவிற்கு சர்வதேச அமைப்புகள் கண்டனம்

இலங்கையர் மூவரை நாடு கடத்திய மலேஷியாவிற்கு சர்வதேச அமைப்புகள் கண்டனம்

எழுத்தாளர் Staff Writer

29 May, 2014 | 7:00 pm

இலங்கையர் மூவரை பயங்கரவாதிகள் என நாடு கடத்திய மலேஷியாவின் செயலை நியூயோர்க் நகரை தளமாகக் கொண்டியங்கும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் மற்றும் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகராலயம் ஆகியன கண்டித்துள்ளன.

இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட மூவரில் இருவர் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகராலயத்தினால் அகதி அந்தஸ்து வழங்கப்பட்டவர்கள் என்றும் மற்றைய நபர் அரசியல் புகலிடக் கோரிக்கையாளர் எனவும் அந்த அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளதாக பிபிசி உலக சேவை செய்தி வெளியிட்டுள்ளது.

அண்மையில் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு புத்துயிரளிக்கும் முயற்சித்ததாக இலங்கை அரசாங்கத்தினால் குற்றஞ்சாட்டப்பட்ட மூவர் படையினருடன் இடம்பெற்ற மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்த நிலையில், மலேஷியாவில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டவர்களின் பாதுகாப்பு குறித்து அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகராலயம் அச்சம் வெளியிட்டுள்ளதாக பிபிசி உலக சேவை சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, மலேஷியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட மூன்று பேரிடமும் தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.

இவர்களில் சந்திரலிங்கராஜா குஷாந்தன் என்பவர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் விமானப் படைப் பிரிவைச் சேர்ந்தவர் எனவும், ஏனைய இருவரும் அந்த இயக்கத்தின் புலனாய்வுப் பிரிவினர் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

இவர்கள் மூவரும் கடந்த 15 ஆம் திகதி இரவு மலேஷியாவில் அந்த நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்