இந்தியாவை மதிக்கின்றோம், ஆனால் எமது பிரச்சினைகளை நாங்களே தீர்த்துக்கொள்வோம் – நிமல் சிறிபால டி சில்வா (Video)

இந்தியாவை மதிக்கின்றோம், ஆனால் எமது பிரச்சினைகளை நாங்களே தீர்த்துக்கொள்வோம் – நிமல் சிறிபால டி சில்வா (Video)

எழுத்தாளர் Staff Writer

29 May, 2014 | 8:15 pm

இந்திய மத்திய அரசுடன் மாத்திரமே அரசாங்கம் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுப்படுவதாக இன்று இடம்பெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பின்போது அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

[quote]இந்தியாவில் மிகவும் வலுவான மத்திய அரசொன்று காணப்படுகின்றது. அதனை நாங்கள் ஏற்றுக் கொள்கின்றோம். ஆனால் மக்கள் அவையில் ஆளும் கட்சிக்கு பெரும்பான்மை கிடையாது. ஆகவே, மக்களவையில் ஏதேனும் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டுமாயின் ஏனைய கட்சிகளின் ஒத்துழைப்புக்களைப் பெற வேண்டும். அதற்கு அப்பால் சென்று வெளிநாட்டு கொள்கைகள் மற்றும் ஏனைய விடயங்களை எடுத்துக் கொண்டால், அங்கு வலுவான மத்திய அரசு காணப்படுகின்றது. இதனால் கடந்த ஆட்சிக் காலங்களைப் போன்று மத்திய அரசாங்கத்துக்கு அழுத்தங்களை பிரயோகிக்க ஏனைய கட்சிகளால் முடியாது. இலங்கைக்குள் ஏதேனும் இன முரண்பாடு பிரச்சினைகள் காணப்படுமாயின், அது இலங்கை அரசாங்கத்தின் பிரச்சினையாகும். அது உள்ளக பிரச்சினையாகும். சர்வதேச நாடுகள் மற்றும் எமது அயல் நாடுகளின் கருத்துக்களுக்கு நாம் மதிப்பளிக்கின்றோம்.  ஆனால், எமது பிரச்சினைகளை நாங்களே தீர்த்துக்கொள்வோம் என்பதை மிக தெளிவாகக் கூறியுள்ளோம். இந்தியாவில் ஏதேனும் பிரச்சினை  காணப்படுமாயின், அதில் நாம் தலையிடுவதில்லை. ஏன் என்றால், அது எமக்குரிய விடயமல்ல.[/quote]
ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி அவ்வாறாயின் நீங்கள் மத்திய அரசாங்கத்துடன் மாத்திரமா கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுகின்றீர்கள்?

[quote]நிச்சயமாக மத்திய அரசாங்கத்துடன் மாத்திரமே, நாங்கள் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுகின்றோம்.[/quote]


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்