அமெரிக்க தூதரக அரசியல் துறை பொறுப்பாளர் மட்டக்களப்பிற்கு விஜயம்

அமெரிக்க தூதரக அரசியல் துறை பொறுப்பாளர் மட்டக்களப்பிற்கு விஜயம்

எழுத்தாளர் Staff Writer

29 May, 2014 | 9:35 pm

அமெரிக்க தூதரக அரசியல் துறை பொறுப்பாளர் தெரேசா டேல்லாச்சி இன்று மட்டக்களப்பு மாவட்டத்திற்கான விஜயம் ஒன்றினை மேற்கொண்டார்.

இந்த விஜயத்தின்போது மட்டக்களப்பு மாவட்ட பிரஜைகள் குழு அமைப்பினரை சந்தித்து மாவட்டத்தின் தற்போதைய நிலைமை தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் காணப்படும் மதங்களுக்கிடையிலான பிணக்குகள் மற்றும் இணக்கப்பாட்டு விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடபட்டுள்ளது.

அத்துடன் யுத்தத்திற்கு முன்னரான நிலைமை தொடர்பிலும் அதன் பின்னரான தற்போதைய நிலைமை தொடர்பிலும் இரு சாராருக்கும் இடையில் கருத்துக்கள் பறிமாறிக் கொள்ளப்பட்டதாக எமது செய்தியாளர் கூறினார்.

மேலும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள் தொடர்பாகவும் அவர் கேட்டறிந்து கொண்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்