அணிசேரா நாடுகள் அமைப்பின் வெளிவிவகார அமைச்சர்கள் மாநாடு  ஆரம்பம்

அணிசேரா நாடுகள் அமைப்பின் வெளிவிவகார அமைச்சர்கள் மாநாடு ஆரம்பம்

அணிசேரா நாடுகள் அமைப்பின் வெளிவிவகார அமைச்சர்கள் மாநாடு ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

29 May, 2014 | 3:42 pm

அணிசேரா நாடுகள் அமைப்பின் 17ஆவது வெளிவிவகார அமைச்சர்களின் மாநாடு அல்ஜீரியாவின், அல்ஜீஸ் நகரில் இன்று ஆரம்பமானது.

இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பிரீஸ் இந்த மாநாட்டில் கலந்துகொண்டுள்ளார்.

இந்த மாநாட்டில் 120 நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர்.

1961ஆம் ஆண்டு ஆரம்பமான அணிசேரா நாடுகள் அமைப்பின் செயற்பாட்டு உறுப்பினரான இலங்கை, பாரிய சேவையில் ஈடுபட்டதுடன், 1976 ஆம் ஆண்டு அந்த அமைப்பின் அரச தலைவர்கள் மாநாடு இலங்கையில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்