வெட்டுக்காயங்களுடன் சடலம்; அருகில் மதுபானப் போத்தல்கள் (வீடியோ)

வெட்டுக்காயங்களுடன் சடலம்; அருகில் மதுபானப் போத்தல்கள் (வீடியோ)

எழுத்தாளர் Bella Dalima

27 May, 2014 | 7:18 pm

மினுவங்கொடை ஜனாதிபதி வித்தியாலயத்திலிருந்து வெட்டுக்காயங்களுடன் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்த சடலம் இன்று (27) முற்பகல் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

மினுவங்கொடை மிரிஸ்வத்த பகுதியைச் சேர்ந்த 17 வயதான இளைஞர் ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞர் நேற்று (26) மாலை தனது நண்பர்களை சந்திப்பதாகத் தெரிவித்து, வீட்டிலிருந்து சென்றுள்ளதாக உறவினர்கள் குறிப்பிட்டனர்.

சடலம் கண்டெடுக்கப்பட்ட இடத்திலிருந்து மதுபான போத்தல்கள் சிலவும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது குறித்து பிரதேசவாசி ஒருவர் தெரிவிக்கையில்,

“மினுவங்கொடை பகுதியிலேயே மிகவும் பாழடைந்த ஓர் இடமே இது. இந்த இடத்தில் இதற்கு முன்னர் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த இடத்திற்குப் பாதுகாப்பு நடைமுறையொன்றை செயற்படுத்த வேண்டும். இந்த இடத்தில் காவலரனொன்றை அமைத்தேனும், பாதுகாப்பு வழங்கினால் மிகவும் சிறந்தாக அமையும்,” என்றார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்