விடுதலை புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் கைது

விடுதலை புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் கைது

விடுதலை புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் கைது

எழுத்தாளர் Staff Writer

26 May, 2014 | 1:46 pm

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புலனாய்வு பிரிவை சேர்ந்த முன்னாள் உறுப்பினர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இந்த சந்தேகநபர் கிளிநொச்சியில் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண குறிப்பிட்டார்.

சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக கொழும்புக்கு அழைத்துவரப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

சந்தேகநபர் வவுனியா வைத்தியசாலையில் கடந்த இரண்டாயிரத்து ஆறாம் ஆண்டு தொடக்கம் இரண்டாயிரத்து எட்டாம் ஆண்டு வரை சேவையாற்றியுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

யுத்தம் நிறைவடைந்ததன் பின்னரும், விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீள் உருவாக்கும் முயற்சியில் இந்த சந்தேகநபர் ஈடுபட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதுவரையான காலப்பகுதியில், பயங்கரவாத நடவடிக்கைளுக்கு புத்துயிரளிக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டதாக கருதப்படும் சுமார் 50 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்