மோடியின் பதவியேற்பு வைபவத்தில் கலந்துக்கொள்ளவதற்கு  ஜனாதிபதி டெல்லி பயணம்

மோடியின் பதவியேற்பு வைபவத்தில் கலந்துக்கொள்ளவதற்கு ஜனாதிபதி டெல்லி பயணம்

மோடியின் பதவியேற்பு வைபவத்தில் கலந்துக்கொள்ளவதற்கு ஜனாதிபதி டெல்லி பயணம்

எழுத்தாளர் Staff Writer

26 May, 2014 | 7:37 am

இந்தியாவின் புதிய பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கும் வைபவத்தில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ் இன்று டெல்லி பயணமாகவுள்ளார்.

இந்தியக் குடியரசுத் தலைவர் மாளிகையான ராஷ்ட்ர-பதி-பவனில் இன்று மாலை நடைபெறவுள்ள பதவியேற்பு நிகழ்வில் சுமார் மூவாயிரத்திற்கும் அதிகமான விசேட விருந்தினர்கள் கலந்துக் கொள்ளவுள்ளனர்.

நரேந்திர மோடியின் பதிவியேற்பு நிகழ்வில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இன்று காலை நாட்டிலிருந்து பயணமாகவுள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் வருகையை இந்திய மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளதாக இந்தியாவிற்கான இலங்கை தூதுவர் பிரசாத் காரியவசம் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்