நாவிதன்வெளியில் பாடசாலை அதிபருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

நாவிதன்வெளியில் பாடசாலை அதிபருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

நாவிதன்வெளியில் பாடசாலை அதிபருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

எழுத்தாளர் Staff Writer

26 May, 2014 | 6:25 pm

அம்பாறை, நாவிதன்வெளியிலுள்ள பாடசாலை ஒன்றின் அதிபரை நீக்குமாறு கோரி மாணவர்களும், பெற்றோர்களும் இன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்று காலை 07 மணி தொடக்கம் இந்த எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

பாடசாலை அதிபரின் செயற்பாடுகளால் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதாக எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவர்கள் குறிப்பிட்டனர்.

நாவிதன்வெளி பகுதியில் உள்ள பாடசாலையின் அதிபர் மீதான குற்றச்சாட்டு தொடர்பில் மாகாண கல்விப் பணிப்பாளரிடம் நியூஸ்பெஸ்ட் வினவியபோது, குறித்த அதிபர் தொடர்பில் முறைப்பாடு கிடைத்துள்ளதாகவும், சம்மாந்துறை வலயக் கல்வி பணிப்பாளரை விடயம் தொடர்பில் ஆராய்வதற்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.டீ.ஏ நிசாம் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்