ஆசிய ஒலிபரப்பு ஒன்றியத்தின் பதிப்புரிமைக்குழுக் கூட்டம் மற்றும் மாநாடு

ஆசிய ஒலிபரப்பு ஒன்றியத்தின் பதிப்புரிமைக்குழுக் கூட்டம் மற்றும் மாநாடு

எழுத்தாளர் Staff Writer

26 May, 2014 | 10:22 pm

ஆசிய ஒலிபரப்பு ஒன்றியத்தின் 20ஆவது பதிப்புரிமைக்குழுக் கூட்டமும் மாநாடும் இரத்மலானையில் உள்ள ஸ்டைன் கலையத்தில் இன்று நடைபெற்றது.

எம்.ரீ.வி/எம்.பீ.சி மற்றும் நியுஸ்பெஸ்ட் ஆகியன முன்னெடுக்கும் ஆசிய ஒலிபரப்பு ஒன்றியத்தின் 20ஆவது பதிப்புரிமை மாநாட்டினை ஆசிய பசுபிக் ஒலிபரப்பு ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ளது.

பதிப்புரிமையை பாதுகாப்பது தொடர்பில் அரசாங்கத்துடன் கலந்துரையாடல்களை மேற்கொள்வதன் முக்கியத்துவம் தொடர்பில் ஆசிய ஒலிபரப்பு ஒன்றியத்தின் செயலாளர் நாயகம் கருத்து வெளியிட்டார்.

சஷி  ராஜமகேந்திரன் – பிரதம செயற்பாட்டு அதிகாரி
வரையறுக்கப்பட்ட கெபிடல் மகாராஜா நிறுவனம்
[quote]
அறிவிப்பாளர்களின் உரிமைகள் தொடர்பில் கனவனத்தில் கொண்டால் கெபிடல் மகாராஜா நிறுவனம் முன்னணியில் உள்ளது. இலங்கையில் உள்ள மிகவும் பெரியளவிலாள ஒலி மற்றும் ஒளி களஞ்சியம் எம்மிடத்திலேயே உள்ளது. அபிவிருத்தியை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு முக்கியமான வெளிநாட்டு முதலீடுகளை பாதுகாப்பதற்கு தேவையான அறிவுடவை, உரிமைகளை பாதுகாப்பதில் நாம் முன்நிற்கின்றோம். நாம் புத்தாக்குனர்களை உருவாக்குவதற்கும் அவர்களை பாதுகாப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களின் அறிவும், திறமையும் வெளிநாடுகளுக்கு சென்று விடாமல் அதனை உள்நாட்டில் பயன்படுத்த வேண்டும்.[/quote]


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்