அமலாபால் – இயக்குனர் விஜய் திருமணம் ஜூன் 12; இருவருமே இணைந்து அறிவிப்பு

அமலாபால் – இயக்குனர் விஜய் திருமணம் ஜூன் 12; இருவருமே இணைந்து அறிவிப்பு

அமலாபால் – இயக்குனர் விஜய் திருமணம் ஜூன் 12; இருவருமே இணைந்து அறிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

26 May, 2014 | 4:57 pm

இயக்குனர் விஜய் – நடிகை அமலாபால் இருவருமே தங்களது திருமணம் ஜுன் 12ஆம் திகதி நடைபெறவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

இயக்குநர் விஜய் – அமலா பால் திருமணம் குறித்து பல்வேறு செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தாலும், அச்செய்தியை இருதரப்பினரும் உறுதி செய்யவே இல்லை.

இந்நிலையில் இன்று இயக்குனர் விஜய் – அமலா பால் இருவருமே பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். இருவருமே அவர்களது திருமண அழைப்பிதழை பத்திரிகையாளர்களுக்கு கொடுத்துள்ளனர்.

அப்போது இயக்குநர் விஜய் கூறியது, “என்னோட வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகித்தவர்கள் பத்திரிகையாளர்கள் தான். இப்போது என்னோட வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு செல்கிறேன். உங்களுடைய ஆசிர்வாதம் எனக்கு வேண்டும். என்னுடைய திருமணம் ஜுன் 12ஆம் தேதி நடைபெற இருக்கிறது. அன்றைய தினம் மாலையில் எங்களது வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற இருக்கிறது.

எங்களைப் பற்றி பல்வேறு செய்திகள் வலம் வந்த வண்ணம் உள்ளன. எப்படி இந்த செய்திகள் எல்லாம் வெளிவருகின்றன என்று தெரியவில்லை. என்னுடைய நெருங்கிய தோழியை தான் நான் திருமணம் செய்ய இருக்கிறேன். நாங்கள் நண்பர்களாக இருக்கும் போது, காதலிக்கிறார்கள் என்று செய்தி எல்லாம் வந்தது. எங்களுடைய நட்பு அடுத்த கட்டத்திற்கு சென்றது கடந்த 8 மாதமாக தான். இப்போதைக்கு எனது திருமணம் மற்றும் ‘சைவம்’ படம் இரண்டைப் பற்றி மட்டுமே சிந்திக்கிறேன்” என்றார்.

நடிகை அமலா பால் கூறியது, “திருமணத்திற்கு பிறகு மசாலா படங்களில்  நடிக்க மாட்டேன். நல்ல கதைகள் வந்தால் நடிப்பது குறிப்பது அந்த சமயத்தில் முடிவெடுப்பேன். திருமணத்திற்கு பிறகு முழுக்க குடும்ப வாழ்க்கையை மட்டுமே கவனிப்பேன்” என்றார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்