ரஜனிகாந்த் மற்றும் அமிதாப்பச்சன்  விஜய்க்கு மோடியின் அழைப்பு

ரஜனிகாந்த் மற்றும் அமிதாப்பச்சன் விஜய்க்கு மோடியின் அழைப்பு

ரஜனிகாந்த் மற்றும் அமிதாப்பச்சன் விஜய்க்கு மோடியின் அழைப்பு

எழுத்தாளர் Staff Writer

24 May, 2014 | 2:33 pm

நரேந்திரமோடியின் பதவியேற்பு நிகழ்வில் பங்குபற்றுமாறு இந்திய திரையுலக நட்சத்திரங்களான அமிதாப்பச்சன் மற்றும் ரஜனிகாந்த், விஜய் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நடிகர் சல்மான் கான் மற்றும் பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் ஆகியோருக்கும் பதவியேற்பு நிகழ்வில் பங்குபற்ற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பாரதிய ஜனதா கட்சி தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 26 ஆம் திகதி இடம்பெறவுள்ள பதவியேற்பு நிகழ்விற்கு சுமார் 2500 பேர் வரை அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படகின்றது.

இதேவேளை, இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர்களான அப்துல் கலாம் மற்றும் பிரதீபா பட்டேல் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்