போக்குவரத்து பொலிஸார் மீது வில்கமுவயில் தாக்குதல்

போக்குவரத்து பொலிஸார் மீது வில்கமுவயில் தாக்குதல்

போக்குவரத்து பொலிஸார் மீது வில்கமுவயில் தாக்குதல்

எழுத்தாளர் Staff Writer

24 May, 2014 | 1:51 pm

வில்கமுவ நகரில் தாக்குதலுக்கு இலக்கான 2 பொலிஸ் உத்தியோகத்தர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடமையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து பிரிவைச் சேர்ந்த 2 பொலிஸ் உத்தியோகத்தர்களே தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.

இந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் முச்சக்கர வண்டியொன்றை சோதனைக்கு உட்படுத்த முற்பட்டுள்ளனர்.

இதன்போது முச்சக்கர வண்டியில் இருந்ததவர்கள் பொலிஸாருக்கு இடையூறு விளைவித்ததுடன், அவர்கள் மீது தாக்குதலும் நடத்தியிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.

தாக்குதலில் காயமடைந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களும் வில்கமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தாக்குதலை நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களை நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்துவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

குருணாகல் பிரதேசத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் அண்மையில் கடத்திச் செல்லப்பட்டு, அவர்களில் ஒருவர் கொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்