மோடியின் பதவியேற்பு வைபவத்தில் பாகிஸ்தான் பிரதமரின் பங்கேற்பு ஊர்ஜிதம்

மோடியின் பதவியேற்பு வைபவத்தில் பாகிஸ்தான் பிரதமரின் பங்கேற்பு ஊர்ஜிதம்

மோடியின் பதவியேற்பு வைபவத்தில் பாகிஸ்தான் பிரதமரின் பங்கேற்பு ஊர்ஜிதம்

எழுத்தாளர் Staff Writer

24 May, 2014 | 4:53 pm

இந்தியாவின் புதிய பிரதமராக பதவியேற்கவுள்ள நரேந்திர மோடியின் பதவியேற்பு வைபவத்திற்கு குடியரசு தினத்தையொத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நரேந்திர மோடியி்ன் பதவியேற்பு வைபவத்திற்கு தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் காணப்படுவதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததையடுத்தே குடியரசு தினத்திற்கு நிகரான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாக இந்திய பொலிஸார் தெரிவிக்கின்றார்

பல உலகத் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்துக்கொள்ள இருப்பதால் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளதாக   மத்திய அரசு அறிவித்துள்ளது

மோடியின் பதவியேற்பு விழாவில் மூவாயிரம் பேர் வரை கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

அதேவேளை மோடியி்ன் பதவி|யேற்பு வைபவத்திற்கான ஒத்திகைகள் இன்றும் நாளையும் இடம்பெறவுள்ளன

எதிர்வரும் திங்கட்கிழமை மாலை இந்தியாவின் 15 வது பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கவுள்ளார்
ஆப்கானிஸ்தானில் இந்திய தூதரகம் மீதான தாக்குதலையடுத்து இந்தியாவின் பல பிரதேசங்களிலும் பாதுகாப்பு பலப்படு்த்தப்பட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் பதவியேற்பு நிகழ்வில் பங்குபற்றவுள்ளதை  இன்று உறுதி செய்துள்ளார்

சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும் பாகிஸ்தான் பிரதமரின் பங்கேற்பு குறித்து இதுவரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்