தேசிய சுதந்திர முன்னணியின் முக்கிய பிரேரணைகள் ஜனாதிபதியிடம் கையளிப்பு

தேசிய சுதந்திர முன்னணியின் முக்கிய பிரேரணைகள் ஜனாதிபதியிடம் கையளிப்பு

தேசிய சுதந்திர முன்னணியின் முக்கிய பிரேரணைகள் ஜனாதிபதியிடம் கையளிப்பு

எழுத்தாளர் Staff Writer

24 May, 2014 | 6:50 pm

தேசிய சுதந்திர முன்னணியின் அண்மையில் இடம்பெற்ற மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட பிரேரணைகள் இன்று முற்பகல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடம் கையளிக்க்பட்டுள்ளது.

இந்த பிரேரணைகள் கட்சித் தலைவர் அமைச்சர் விமல் வீரவங்சவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

பிரேரணையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுடன் கலந்தாலோசிக்கவுள்ளதாக இதன்போது ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

நாட்டின் எதிர்கால நன்மைக்காக மேற்கொள்ள வேண்டிய அரசியல் மற்றும் பொருளாதார தீர்மானங்கள் குறித்து தாம் ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, கட்சியின் பொருளாளர் அமைச்சர் டலஸ் அலகப்பெரும உள்ளிட்ட கட்சியின் உறுப்பினர்கள் பலரும் பிரேரணைகளை கையளிக்கும் நிகழ்வில் கலந்துக் கொண்டிருந்தனர்.

ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களை விரைவில் நடைமுறைப்படுத்த உள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் ஊடக பேச்சாளர் மொஹமட் முசாம்மில் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்