ஜனாதிபதி விடுத்த அழைப்பை வட மாகாண முதலமைச்சர் நிராகரித்தமை நியாயமானது -மனோ கணேசன்

ஜனாதிபதி விடுத்த அழைப்பை வட மாகாண முதலமைச்சர் நிராகரித்தமை நியாயமானது -மனோ கணேசன்

ஜனாதிபதி விடுத்த அழைப்பை வட மாகாண முதலமைச்சர் நிராகரித்தமை நியாயமானது -மனோ கணேசன்

எழுத்தாளர் Staff Writer

24 May, 2014 | 9:31 am

இந்தியாவின் புதிய பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கும் நிகழ்விற்கு, ஜனாதிபதி விடுத்த அழைப்பை வட மாகாண முதலமைச்சர் நிராகரித்தமை நியாயமானது என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

வட மாகாண முதலமைச்சர் சி்வி.விக்னேஸ்வரனுக்கு இந்திய அரசு நேரடியாக அழைப்பு விடுத்திருக்க வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கு தமிழக தலைவர்கள் முயற்சி செய்திருக்க வேண்டும் எனவும் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கில் மாகாண செயலாளரைக் கூட நியமிக்க முடியாத நிலையில், முதலமைச்சராக இருப்பதால் ஜனாதிபதியின் குழுவில் எவ்வாறு சி.வி விக்னேஸ்வரன் இணைந்து கொள்ளமுடியுமெனவும் மனோ கணேசன் கேள்வியெழுப்பியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்