சோமாலிய பாராளுமன்றத்தின் மீது ஆயுதாரிகள் தாக்குதல்

சோமாலிய பாராளுமன்றத்தின் மீது ஆயுதாரிகள் தாக்குதல்

சோமாலிய பாராளுமன்றத்தின் மீது ஆயுதாரிகள் தாக்குதல்

எழுத்தாளர் Staff Writer

24 May, 2014 | 8:01 pm

சோமாலியத் தலைநகர் மொஹாடிசுவிலுள்ள பாராளுமன்றக் கட்டத்தை ஆயுததாரிகள் தாக்கியுள்ளனர்.

அல் ஷபாப் ஆயுததாரிகளால் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் இந்தத் தாக்குதலில் பலர் கொல்லப்பட்டுள்ளனர்.

1992 ஆம் ஆண்டு அரசாங்கம் பதவி கவிழக்கப்பட்டதை தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே சோமாலியாவில் புதிய அரசாங்கம்  பதவியேற்றிருந்தது.

பலவீனமான சோமாலிய அரசாங்கம் கிளர்சியாளர்களுக்கு எதிரான யுத்தம் தொடரும் என அறிவித்திருந்த நிலையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

பாராளுமன்றக் கட்டடத்தை ஆயுததாரிகள் கைப்பற்றியுள்ளார்களாக   என்பது இதுவரை தெரியவரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்