எல்பிட்டிய நகரில் பல்கலைக்கழக மாணவி கொலை; இராணுவ வீரர் கைது (Photos)

எல்பிட்டிய நகரில் பல்கலைக்கழக மாணவி கொலை; இராணுவ வீரர் கைது (Photos)

எல்பிட்டிய நகரில் பல்கலைக்கழக மாணவி கொலை; இராணுவ வீரர் கைது (Photos)

எழுத்தாளர் Staff Writer

24 May, 2014 | 7:39 pm

எல்பிட்டிய பகுதியில் பல்கலைக்கழக மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதுதொடர்பான இன்று காலை ஆறு மணியளவில் கிடைத்த தகவலுக்கு அமைய எல்பிட்டிய பிரதான பஸ் தரிப்பிடத்திற்கு வெட்டுக் காயங்களுடன் இறந்துகிடந்த யுவதியின் சடலம் மீட்கப்பட்டிருந்து.

Elpitiya-University-Student-Murder-newsfirst

நியாகம, தல்கஸ்வல பகுதியைச் சேர்ந்த 22 வயதான பல்கலைக்கழக மாணவியே கொலை செய்யப்பட்டுள்ளார்.

கலைப் பல்கலைக்கழகத்தில் இந்த மாணவி கல்வி கற்றுவந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த கொலை சம்பவம் தொடர்பான நீதவான் விசாரணைகள் எல்பிட்டிய பதில் நீதவான் சட்டத்தரணி ஜானக ருவன்புரவினால் இன்று முற்பகல் நடத்தப்பட்டது.

Elpitiya-University-Student-Murder-newsfirst-2

அதன் பின்னர் பிரேத பரிசோதனைக்காக யுவதியின் சடலம் கராப்பிட்டி போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் கைதான இராணுவ வீரர், யுவதியின் காதலர் எனத் தெரிவிக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண குறிப்பிடுகின்றார்.

இதேவேளை, இந்த கொலை சம்பவம் தொடர்பில் இராணுவ தளபதி லெப்டினண்ட் ஜெனரல் தயா ரத்நாயக்க கவனம் செலுத்தியுள்ளார்.

கொலை சம்பவம் தொடர்பான விசாரணைகளை வெற்றிகரமாக முன்னெடுக்கும் பொருட்டு சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையத்திற்கு பூரண ஒத்துழைப்பை வழங்குமாறு இராணுவ தளபதி தமது சிரேஷ்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளதாக இராணுவ தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Elpitiya-University-Student-Murder-newsfirst-1

இதுபோன்ற குற்றச் செயல்கள் குறித்து தராதரம் பாராது நடவடிக்கை மேற்கொள்வதற்காக, பின்வாங்கப் போவதில்லை என்றும் இராணுவத் தளபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கமைய உடன் அமுலாகும் வகையில் சந்தேகநபரான இராணுவ வீரர் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்