எல்பிட்டிய நகரில் பல்கலைக்கழக மாணவி கொலை; சந்தேகநபர் கைது (Photos)

எல்பிட்டிய நகரில் பல்கலைக்கழக மாணவி கொலை; சந்தேகநபர் கைது (Photos)

எல்பிட்டிய நகரில் பல்கலைக்கழக மாணவி கொலை; சந்தேகநபர் கைது (Photos)

எழுத்தாளர் Staff Writer

24 May, 2014 | 2:59 pm

எல்பிட்டிய நகரிலுள்ள பஸ் தரிப்பிடத்திற்கு அருகில் பல்கலைக்கழக மாணவி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நியாகம, தல்கஸ்வல பகுதியைச் சேர்ந்த 22 வயதான யுவதி ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண குறிப்பிடுகின்றார்.

Elpitiya-University-Student-Murder-newsfirst-1

இந்த யுவதி கொழும்பு நோக்கி வருவதற்காக இன்று அதிகாலை மூன்று மணியளவில் வீட்டிலிருந்து புறப்பட்டமை விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

Elpitiya-University-Student-Murder-newsfirst
கலைப் பல்கலைக்கழகத்தின் இரண்டாம் ஆண்டில் இந்த மாணவி கல்வி பயின்று வந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேகநபரிடம் இந்த கொலை சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் கூறுகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்