அம்பாறையில் கலப்படம் செய்யப்பட்ட மண்ணெண்ணெய் பயன்படுத்தப்பட்டதால் மீன்பிடி படகுகள் பழுது

அம்பாறையில் கலப்படம் செய்யப்பட்ட மண்ணெண்ணெய் பயன்படுத்தப்பட்டதால் மீன்பிடி படகுகள் பழுது

அம்பாறையில் கலப்படம் செய்யப்பட்ட மண்ணெண்ணெய் பயன்படுத்தப்பட்டதால் மீன்பிடி படகுகள் பழுது

எழுத்தாளர் Staff Writer

24 May, 2014 | 7:54 pm

அம்பாறை மாவட்டத்தில் கலப்படம் செய்யப்பட்ட மண்ணெண்ணெய் பயன்படுத்தப்பட்டதால் மீன்பிடி படகுகள் பழுதடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அட்டாளைச்ஹேனை பகுதியில் மாத்திம் 320 க்கும் அதிகமான படகுகளின் இயந்திரங்கள் பழுதடைந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.

தமது படகுகளுக்கு மண்ணெண்ணெய் கொள்வனவு செய்யும் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்று எருபொருள் பெற்றதாகவும் இதன் பின்னரே இந்த நிலை ஏற்பட்டதாகவும் பாதிக்கப்பட்ட மீனவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதன் காரணமாக மாவட்டத்தில் கடற்றொழிலில் ஈடுபட்ட பல மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்தில் கலப்படம் செய்யப்பட்ட மண்ணெண்ணெய் பயன்பாட்டுக்கு வந்தமை தொடர்பில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகத்திடம் நியூஸ்பெஸ்ட் வினவியது

இதுதொடர்பாக தமது அலுவலகத்திற்கு முறைபாடு கிடைத்துள்ளதாக அந்த அலுவலக பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

பழுதடைந்ததாக கூறப்படும் படகுகளுக்குப் பயன்படுத்தப்பட்டிருந்த மண்ணெண்ணெய் மாதிரிகள் சிலவற்றை இரசாயனப் பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்