யார் இந்த ஆனந்திபென் பட்டேல்?

யார் இந்த ஆனந்திபென் பட்டேல்?

யார் இந்த ஆனந்திபென் பட்டேல்?

எழுத்தாளர் Bella Dalima

21 May, 2014 | 5:27 pm

நரேந்திர மோடி பிரதமராகத் தெரிவு செய்யப்பட்டதையடுத்து அவர் குஜராத் முதல்வர் பதவியை  ராஜினாமா செய்தார். இதையடுத்து, அந்தப் பதவிக்கு மூத்த அமைச்சரான ஆனந்திபென் பட்டேல் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், ஆனந்திபென் பட்டேல் யார் என்பதைத் தெரிந்து கொள்வோம்.

குஜராத்தைச் சேர்ந்த விவசாயக் குடும்பத்தில் பிறந்த ஆனந்திபென் பட்டேலும்

மோடியும் மெஹ்சானா மாவட்டம் விஸ்நகரில் உள்ள என்.எம். உயர் நிலைப்பள்ளியில் படித்தவர்கள்.
கல்லூரிப் படிப்பை முடிந்த ஆனந்திபென் பள்ளி ஒன்றில் ஆசிரியையாகப் பணிபுரிந்து தலைமை ஆசிரியையாக பதவி உயர்வு பெற்றார்.
  1987ம் ஆண்டு பள்ளியில் இருந்து சுற்றுலா சென்றபோது 2 மாணவிகள் சர்தார் சரோவர் நீர்த்தேக்கத்தில் விழுந்துவிட்டனர். இதைப் பார்த்த ஆசிரியையான ஆனந்தி, உடனே நீர்த்தேக்கத்தில் குதித்து அவர்களைக் காப்பாற்றினார். அவரின் வீர செயலைப் பாராட்டி மாநில அரசு விருது வழங்கிக் கௌரவித்தது.
ஆனந்திபென்னுக்கு 46 வயது இருக்கையில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் இருந்து பாஜகவுக்கு வந்த 37 வயது மோடி அவரை அணுகி அரசியலுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.
அரசியலுக்கு வரத் தயங்கிய ஆனந்தியை அவரது கணவர் பேராசிரியரான மபாத்பாய் தான் தைரியம் கூறி அனுப்பி வைத்தவர்.

மோடி குஜராத் மாநில பாஜக பொதுச் செயலாளர் ஆனபோது அவர் ஆனந்திபென்னை கட்சியின் மஹிலா மோர்சா தலைவர் ஆக்கினார். மோடியின் ஆதரவில் அரசியலில் வளர்ந்த ஆனந்திபென் 1994 ஆம் ஆண்டில் ராஜ்யசபாவுக்குப் பரிந்துரைக்கப்பட்டார்.

 குஜராத்தில் அதிகக் காலம் பதவியில் இருந்த பெண் எம்.எல்.ஏ. ஆனந்திபென் பட்டேல் தான். அவர் கேஷுபாய் பட்டேல் மற்றும் நரேந்திர மோடி ஆகியோரின் அமைச்சரவையில் அங்கம் வகித்துள்ளார்​ை
ஆனந்திபென் பட்டேல் குஜராத் முதல்வராக பதவியேற்றால் மாநிலத்தின் முதல் பெண் முதல்வர் என்ற பெருமையை பெறுவார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்