”யாராவது எதனையும் செய்தார்களோ தெரியவில்லை” – தூக்கிட்ட ஆசிரியரின் உறவினர் (வீடியோ)

”யாராவது எதனையும் செய்தார்களோ தெரியவில்லை” – தூக்கிட்ட ஆசிரியரின் உறவினர் (வீடியோ)

எழுத்தாளர் Bella Dalima

21 May, 2014 | 9:35 pm

பம்பலப்பிட்டிய பிரதேசத்தில் அமைந்துள்ள பிரபல பாடசாலை ஒன்றின் ஆசிரியர் ஒருவர் தமது தங்குமிடத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

பொலிஸ் அவசர அழைப்புப் பிரிவுக்குக் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் நேற்று இரவு (20) குறித்த ஆசிரியரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த ஆசிரியரின் மனைவி நேற்று இரவு தொலைபேசி அழைப்பொன்றை ஏற்படுத்தியிருந்த நிலையில் அதற்கு அவர் பதில் வழங்கியிருக்கவில்லை.

மனைவியின் தகவல்களுக்கமைய பாடசாலையின் ஆசிரியர் ஒருவர் தங்குமிடங்களை பரிசோதிக்க சென்றபோதே அவர் உயிரிழந்துள்ளதனைக் கண்டுள்ளார்.

37 வயதான உயிரிழந்த ஆசிரியர் குளியாப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்தவர்.

ஆசிரியரின் உறவினர் இதுபற்றித் தெரிவிக்கையில், “கடந்த திங்கட்கிழமை அவர் தன் புதல்வர்களுடன் கதைத்தார். ஒவ்வொரு நாள் காலையிலும் 7.30 க்கு அவர்களுடன் கதைப்பார். ஆனால், செவ்வாய்க்கிழமை கதைக்கவில்லை. அதனால் தேடிப்பார்த்தோம். யாராவது எதனையும் செய்தார்களோ தெரியவில்லை,” என்றார்.

கோட்டை நீதவான் பிரேதப் பரிசோதனைகளை மேற்கொண்ட பின்னர் சடலம் பிரேத அறைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்