மோடி அரவணைப்பில் “தடுமாறி விழப்போன விஜயகாந்த்”- வீடியோ

மோடி அரவணைப்பில் “தடுமாறி விழப்போன விஜயகாந்த்”- வீடியோ

எழுத்தாளர் Bella Dalima

21 May, 2014 | 3:30 pm

இந்தியப் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்த போது அவரது அரவணைப்பில் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் “தடுமாறி” விழப்போயிருக்கிறார்.

நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நேற்று (20) பாரதிய ஜனதா மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பா.ஜ.க குழு மற்றும் தேசிய ஜனநாயகக் குழுவின் தலைவராக மோடி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அப்போது நரேந்திர மோடிக்கு பலரும் வரிசையில் நின்று வாழ்த்து தெரிவித்துக் கொண்டிருந்தனர்.

அந்த வரிசையில் விஜயகாந்த்தும் நின்றுகொண்டிருப்பதைப் பார்த்தார் மோடி. பின்னர் அவரை தமது அருகே வரவழைத்தார்.

விஜயகாந்தை மோடி அரவணைத்து மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்டார்.  மோடி அரவணைத்தபோது விஜயகாந்த் தடுமாறி அப்படியே மோடி மீது சாய்ந்து கீழே விழப்போக அருகில் நின்றவர்கள் அவரைத் தாங்கிப் பிடித்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்