புதிய சிறைச்சாலை அதிகாரிகளை இணைத்துக் கொள்ள நடவடிக்கை

புதிய சிறைச்சாலை அதிகாரிகளை இணைத்துக் கொள்ள நடவடிக்கை

புதிய சிறைச்சாலை அதிகாரிகளை இணைத்துக் கொள்ள நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

21 May, 2014 | 11:21 am

சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கு 67 புதிய சிறைச்சாலை அதிகாரிகளை இணைத்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

திணைக்களத்தினால் அண்மையில் நடத்தப்பட்ட தகுதிகான் பரீட்சையில் பெற்றுக் கொண்ட புள்ளிகளின் அடிப்படையில், அதிகாரிகள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்திரரத்ன பல்லேகம் தெரிவித்தார்

நாடளாவிய ரீதியில் சிறைச்சாலைகளில் வெற்றிடங்கள் நிலவுவதாகவும் அவர் குறிப்பிட்டார்

சிறைச்சாலை அதிகாரிகளுக்கான பரீட்சையில் சித்தி அடையாதவர்களால், பரீட்சையில் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நேற்று தள்ளுபடி செய்யப்படுள்ளதாக  சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் மேலும்  சுட்டிக்காட்டியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்