சட்டவிரோதமாக தங்கம் கடத்த முயன்ற இருவர் கைது

சட்டவிரோதமாக தங்கம் கடத்த முயன்ற இருவர் கைது

சட்டவிரோதமாக தங்கம் கடத்த முயன்ற இருவர் கைது

எழுத்தாளர் Staff Writer

21 May, 2014 | 2:17 pm

சட்டவிரோதமாக நாட்டிற்கு தங்கம் கொண்டுவர முயற்சித்த இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுமார் 10 கிலோகிராம் தங்கத்தை சட்டவிரோதமாக சந்தேகநபர்கள் கொண்டுவர முயற்சித்ததாக சுங்க ஊடகப் பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்தார்.

தமது பயணப் பொதிகளில் சூட்சுமமான முறையில் மறைத்து வைத்து கொண்டுவரப்பட்ட தங்க பிஸ்கட்கள் மற்றும் தங்க நகைகள்  இன்று காலை  சந்தேகநபர்களிடம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சட்விரோதமாக கொண்டுவரப்பட்டுள்ள தங்கத்தின் மொத்தப் பெறுமதி சுமார் 53 மில்லியன் ரூபா எனவும் சுங்க ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்