குஜராத் முதல்வர் பதவியை இராஜினாமா செய்தார் நரேந்திர மோடி

குஜராத் முதல்வர் பதவியை இராஜினாமா செய்தார் நரேந்திர மோடி

குஜராத் முதல்வர் பதவியை இராஜினாமா செய்தார் நரேந்திர மோடி

எழுத்தாளர் Staff Writer

21 May, 2014 | 2:34 pm

இந்திய மக்களவைத் தேர்தலின் வெற்றிப்பெற்ற பாரதீய ஜனதாககட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி குஜராத் முதல்வர் பதவியை இன்று  இராஜினாமா செய்தார்.

கடந்த 12 வருடங்களாக அவர் குஜராத் முதல்வராக ஆட்சி புரிந்துவந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த நிலையில் எதிர்வரும் 26 ஆம் திகதி மோடி பிரதமராக பதவியேற்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வருடத்தின் இறுதியில் நடைபெறவுள்ள காலநிலை மாற்றம் தொடர்பான ஐ,நாவின் பொதுச் சபைக் கூட்டத்தில் இந்தியாவின் பிரதமராக பதவியேற்கவுள்ள நரேந்திர மோடி பங்கேற்பார் என எதிர்ப்பார்ப்பதாக ஐ.நாவின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் குறிப்பிட்டுள்ளார்

இந்த நிலையில் இந்திய மக்களவையில் கூட்டணி எதிர்கட்சியொன்றுக்கான வாய்ப்புகளும்  காணப்படுவதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்’.

அண்ணா திராவிட முன்னேற்ற கழகமும் திரிணாமுல் காங்கிரசும் இணைந்து கூட்டணியொன்றை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் பாரதீய ஜனதாக்கட்சிக்கு அடுத்த இடத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் 44 ஆசனங்’களுடன் இரண்டாம் இடத்திலுள்ளது.

எவ்வாறாயினும் அண்ணா திராவிட முன்னேற்ற கழகமும் திரிணாமுல் காங்கிரசும் கூட்டணி அமைக்கும் பட்சத்தில் இந்த கூட்டணியின் ஆசனங்களின் எண்ணிக்கை 71 ஆக அதிகரிக்கும்.

இந்த நிலையில் கூட்டணி எதிர்கட்சியொன்று அமையாதவிடத்து  காங்கிரஸிருந்து எதிர்கட்சி  தலைவராக  யார் நியமிக்கப்படுவார்கள் என்பது தொடர்பில் பல கருத்துக்கள் நிலவுகின்றன.

இதேவேளை,  20 ஆசனங்களை கைப்பற்றி நான்காம் இடத்தில் உள்ள பிஜூ ஜனதாத்தள கட்சி எந்த கூட்டணியில் இணையும் என்பது தொடர்பிலும் கேள்விகள் எழுந்துள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்