உலகின் இரண்டாவது பணக்கார நடிகரானார் ஷாருக்கான்

உலகின் இரண்டாவது பணக்கார நடிகரானார் ஷாருக்கான்

உலகின் இரண்டாவது பணக்கார நடிகரானார் ஷாருக்கான்

எழுத்தாளர் Bella Dalima

21 May, 2014 | 7:05 pm

உலகின் பணக்கார நடிகர்கள் பட்டியலில் ஷாருக்கான் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார்.

டொம் க்ரூஸ், ​​ ஜோனி டெப் போன்ற ஹொலிவுட் நடிகர்களை உள்ளடக்கிய 10 பணக்கார நடிகர்கள் பட்டியலில் 48 வயதான பொலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு இரண்டாம் இடம் கிடைத்துள்ளது.

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் உரிமையாளரான ஷாருக்கானின் சொத்து மதிப்பு 600 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பணக்கார நடிகர்கள் பட்டியலில் 820 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்புடைய சொத்தினைக் கொண்டுள்ள ​பொலிவுட் நகைச்சுவை நடிகர் ஜெரி செய்ன்பெல்ட் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

டொம் க்ரூஸ் மூன்றாம் இடத்திலும் (480 மில்லியன் அமெரிக்க டொலர்கள்) டெய்லர் பெர்ரி, ஜோனி டெப் ஆகி​யோர் (450 மில்லியன் அமெரிக்க டொலர்கள்) நான்காம் இடத்திலும் உள்ளனர்.

இந்தப் பட்டியலில் ஜேக் நிக்கல்சன், டொம் ஹேங்க்ஸ், க்ளின்ட் ஈஸ்ட்வுட், பில் கொப்சி, அடம் சென்ட்லர் ஆகியோரும் உள்ளடகப்பட்டுள்ளனர்.

வெல்த் – X (Wealth-X) இனால் இந்த சொத்து மதிப்பு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்