இலங்கை மீனவர்கள் 14 பேர் கைது

இலங்கை மீனவர்கள் 14 பேர் கைது

இலங்கை மீனவர்கள் 14 பேர் கைது

எழுத்தாளர் Staff Writer

21 May, 2014 | 2:05 pm

இந்திய கடற் எல்லையில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட 14  இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு தூத்துக்குடி கடற்பகுதியில் மூன்று படகுகளுடன் இலங்கை மீனவர்கள் 14 பேரும் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் தூத்துக்குடி கரையோர பாதுகாப்பு பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருதாகவும் அமைச்சின் ஊடக செயலாளர் நரேந்திர ராஜபக்ஸ குறிப்பிட்டார்.

தமிழகத்தில் இன்று அதிகாலை கைது செய்யப்பட்ட மீனவர்ளை விடுவித்து கொள்வதற்கான நடவடிக்கைகளை அமைச்சு மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களுடன் மொத்தமாக 25 மீனவர்களும் 05 படகுகளும்  தழிழகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் 31 இலங்கை மீனவர்களும் 05 படகுகளும் ஆந்திரா பகுதியில் தடுத்து வைக்க்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்