இருபதுக்கு-20 வரலாற்றில் சாதனைகள் பல படைத்துள்ள பிரட் ஹொஜ்ஜின் புதிய சாதனை(VIDEO)

இருபதுக்கு-20 வரலாற்றில் சாதனைகள் பல படைத்துள்ள பிரட் ஹொஜ்ஜின் புதிய சாதனை(VIDEO)

எழுத்தாளர் Staff Writer

21 May, 2014 | 1:48 pm

இருபதுக்கு-20 கிரிக்கெட் வரலாற்றில் 6000 ஓட்டங்களை கடந்த இரண்டாவது வீரர் என்ற புதிய சாதனையை படைத்தார்.

இந்த சாதனையை நேற்று நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 40 ஓட்டங்களை பெற்றதன் மூலம் குறித்த சாதனையை படைத்தார்.

இதேவேளை, இதுவரையில் இருபதுக்கு-20 போட்டில் 6025 ஓட்டங்களை இவர் பெற்றுள்ளார்.

இந்த ஓட்டத்தை பெறுவதற்கு 600 நான்கு ஓட்டங்களையும், 178 ஆறு ஓட்டங்களையும் பெற்றுள்ளார்.

39 வயதுடைய பிரட் ஹொஜ் இதுவரையில் இருபதுக்கு-20 போட்டிகளில் 41 அரை சதங்களை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இருபதுக்கு-20 போட்டிகளில் கிறீஸ் கெய்ல் 6000 ஓட்டங்களை கடந்த முதல் வீரர் என்று பெருமை பெற்றுள்ளதுடன் இதுவரையில் 6168 ஓட்டங்களை பெற்றுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
con[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்