அலுவலக ரயில் சேவைகள் பல இரத்து

அலுவலக ரயில் சேவைகள் பல இரத்து

எழுத்தாளர் Bella Dalima

21 May, 2014 | 6:06 pm

லொக்கோமோட்டிவ் பொறியியலாளர்கள் சிலர் பணிக்கு சமூகமளிக்காத காரணத்தால் 10 அலுவலக ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

இதன் காரணமாக பிரதான மார்க்கம், கடலோர மார்க்கம் மற்றும் களனிவௌி மார்க்கத்தினூடான ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக இரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

கொழும்பிலிருந்து மொரட்டுவை, ராகமை, பொல்கஹவெல, மீரிகம மற்றும் அளுத்கம நோக்கிப் பயணிக்கும் ரயில் சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளவற்றில் அடங்கும்.

ஏனைய தொலைதூர ரயில் சேவைகள் வழமைபோல் இடம்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்