அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று

எழுத்தாளர் Staff Writer

21 May, 2014 | 2:00 pm

ஐக்கிய தேசியக் கட்சியினால் அரசாங்கத்திற்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை மீதான இரண்டாம் நாள் விவாதம் தற்போது பாராளுமன்றத்தில் ஆரம்பமாகியுள்ளது.

இந்த நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று மாலை 6.30க்கு பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது.

போதைப்பொருள் கடத்தலின் கேந்திர நிலையமாக நாடு மாறியுள்ளதாகவும்,  அவற்றை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் தெரிவித்து, ஐக்கிய தேசியக் கட்சி இந்த பிரேரணை சமர்ப்பித்துள்ளது.

இதேவேளை, நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு மக்கள் விடுதலை முன்னணி தீர்மானித்துள்ளது.

அரசாங்கம் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு ஆதரவு வழங்குவதாகவும், அவர்களை பாதுகாப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் கூறினார்.

எனவே, அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க தீர்மானித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, நம்பிக்கையில்லா பிரேரணை மீது இன்று மாலை நடைபெறவுள்ள வாக்கெடுப்பில் பங்கேற்காதிருப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது.

தமது நிலைப்பாடு தொடர்பில் கட்சி செயற்குழு தற்போது தீர்மானமொன்றை எட்டியுள்ளதாக ஜாதிக்க ஹெல உறுமய குறிப்பிட்டுள்ளது.

இந்தத் தீர்மானம் தொடர்பில் இன்று மாலை அறிவிக்கவுள்ளதாக ஜாதிக்க ஹெல உறுமய சுட்டிக்காட்டியது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்