விளையாட்டை நிர்வகிக்கும் பொறுப்பை பயங்கரவாதிகளுக்கு வழங்க முடியாது – ஜனாதிபதி

விளையாட்டை நிர்வகிக்கும் பொறுப்பை பயங்கரவாதிகளுக்கு வழங்க முடியாது – ஜனாதிபதி

எழுத்தாளர் Bella Dalima

20 May, 2014 | 9:13 pm

விளையாட்டை நிர்வகிக்கும் பொறுப்பை பயங்கரவாதிகளுக்கு வழங்க முடியாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, பாகிஸ்தான் ஜனாதிபதி மம்நூன் ஹூசைனிடம் கூறியுள்ளார்.

இதேவேளை, அனைத்து சந்தர்ப்பங்களிலும் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக பாகிஸ்தான் சுட்டிக்காட்டியுள்ளது.

சீனாவின் ஷங்ஹாய் நகரில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடன் இன்று நடைபெற்ற இருதரப்பு சந்திப்பின்போது பாகிஸ்தான் ஜனாதிபதி மம்னூன் ஹூசேய்ன் இதனைக் கூறியுள்ளார்.

சீனாவில் நாளை (21) ஆரம்பமாகவுள்ள ஆசிய நாடுகளுக்கு இடையிலான தொடர்பாடல் மற்றும் நம்பிக்கையைக் கட்டியெழுப்பும் செயற்பாடுகள் தொடர்பிலான நான்காவது மாநாட்டிற்கு முன்னோடியாக இந்த இருதரப்பு சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இலங்கையில் யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியிலும், அதன் பின்னரும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையிலும், அனைத்து சந்தர்ப்பங்களிலும் இலங்கைக்கு வழங்கிய ஆதரவிற்காக பாகிஸ்தான் ஜனாதிபதிக்கு, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நன்றி தெரிவித்ததாக ஜனாதிபதி பேச்சாளர் மற்றும் சர்வதேச ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான கிரிக்கெட் விளையாட்டு மற்றும் வர்த்தகம் தொடர்பிலும் இதன்போது இரண்டு தலைவர்களும் கலந்துரையாடியுள்ளனர்.

சர்வதேச அரங்கில் பாகிஸ்தான் இலங்கைக்குத் தொடர்ந்தும் ஒத்துழைப்புக்களை வழங்கும் என பாகிஸ்தான் ஜனாதிபதி மம்நூத் ஹூசைன் கூறியுள்ளார்.

யுத்தத்தின் பின்னர் 14 ஆயிரம் பேரை சமூகப்படுத்தியுள்ளதாகவும் யுத்தத்தின் பின்னரான இலங்கையின் செயற்பாடுகள் தொடர்பிலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பாகிஸ்தான் ஜனாதிபதிக்கு விளக்கியுள்ளார்.

 

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்