வட மாகாண சபை உறுப்பினர் ரவிகரன் நீதிமன்றத்தில் ஆஜர்

வட மாகாண சபை உறுப்பினர் ரவிகரன் நீதிமன்றத்தில் ஆஜர்

எழுத்தாளர் Bella Dalima

20 May, 2014 | 7:21 pm

வட மாகாண சபை உறுப்பினர் ரவிகரன் இன்று முல்லைத்தீவு நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.

காணாமற்போனோர் தொடர்பில் முல்லைத்தீவு நீதிமன்றத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுக்க முற்பட்டதாக பொலிஸார் நீதிமன்றத்தில் அறிவித்த நிலையிலேயே அவரை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

வட மாகாண சபை உறுப்பினர் ரவிகரன்  இது பற்றித் தெரிவித்ததாவது;

“காணாமற்போனோர் விடயமாக நீதிமன்றத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்தும் முன்னெடுக்கத் திட்டமிட்டிருப்பதாகவும் அமைதிக்குப் பங்கம் விளைவிப்பதாகக் கருதியும் முல்லைத்தீவு பொலிஸாரால் அந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

என்னிடம் அந்தக் கேள்வி நீதிமன்றத்தால் கேட்கப்பட்டபோது நான் சொன்னேன், காணாமல் போனவர்கள் உங்களுடைய உறவுகள்தான், அவர்களுக்காக ஆர்ப்பாட்டம் நடத்துவது பிழை அல்ல என்பது என்னுடைய எண்ணம்.

ஆனால், இன்று நீதிமன்றத்திற்கு முன்னால் அந்த ஆர்ப்பாட்டம் எனது தலைமையில் நடைபெறுவதாக பொலிஸாரால் சொல்லப்பட்டது சோடிக்கப்பட்ட கதை என்பதை இங்கு சுட்டிக்காட்டுகிறேன், என்று கூறினேன்.  அதை ஏற்றுக்கொண்டு அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது, என்னையும் விடுவித்தார்கள்,” என்றார் அவர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்