வடக்கில் கோர ரயில் விபத்துக்கள் நேரும் அபாயம்!

வடக்கில் கோர ரயில் விபத்துக்கள் நேரும் அபாயம்!

வடக்கில் கோர ரயில் விபத்துக்கள் நேரும் அபாயம்!

எழுத்தாளர் Bella Dalima

20 May, 2014 | 7:59 pm

கிளிநொச்சி பிரதேசத்தில் பாதுகாப்பற்ற ரயில் கடவைகளினால் விபத்துக்கள் அதிகரித்துள்ளன.

வடக்கில் நீண்டகாலத்தின் பின்னர் ரயில் போக்குவரத்துக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

வடக்கு ரயில் போக்குவரத்துப் பாதைகளில் அண்மையில் இடம்பெறும் விபத்துக்கள் மக்களை அச்சம் நிறைந்த பயணத்திற்குத் தள்ளியுள்ளன.

நேற்றைய தினம் (19) கிளிநொச்சி உதயநகருக்குச் செல்லும் ரயில் கடவையில் வாகனம் ஒன்று விபத்திற்கு உள்ளாகியுள்ளது.

பாதுகாப்பற்ற ரயில் கடவையின் ஊடாக சென்ற வாகனம் பள்ளம் ஒன்றில் சிக்கியபோதே இந்த விபத்து நேர்ந்துள்ளது.

கிளிநொச்சியிலிருந்து கொழும்பை நோக்கிப் புறப்பட்ட தபால் புகையிரதமே இவ்வாறு வாகனத்துடன் மோதுண்டது.

குறித்த பாதுகாப்பற்ற ரயில் கடவையில் பாதுகாப்பு மறிப்புக்களை செய்து தருமாறு மக்கள் பல தடவைகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதவேளை, வடக்கில் இவ்வாறு காணப்பட்ட பல பாதுகாப்பற்ற ரயில் கடவைகளில் விபத்துக்கள் இடம்பெற்றுள்ளமை இங்கு நினைவுகூரத்தக்கது.

குறித்த ரயில் கடவையின் ஊடாக 8 கிராமங்களைச் சேர்ந்த மக்களும் கிளிநொச்சி நகரை அண்டிய பல்லாயிரக்கணக்கான பாடசாலை மாணவர்களும் பயணம் செய்து வருகிறார்கள்.

விரைவில் இந்த ரயில் கடவைக்கு பாதுகாப்பு மறிப்புக்களை அமைத்துத் தருமாறு இந்தப் பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்