ராஜீவ் கொலை வழக்கு தொடர்பில் தீர்வு எட்டப்படும் என்கிறார் ராம் ஜெத்மலானி

ராஜீவ் கொலை வழக்கு தொடர்பில் தீர்வு எட்டப்படும் என்கிறார் ராம் ஜெத்மலானி

ராஜீவ் கொலை வழக்கு தொடர்பில் தீர்வு எட்டப்படும் என்கிறார் ராம் ஜெத்மலானி

எழுத்தாளர் Bella Dalima

20 May, 2014 | 7:39 pm

பாரதீய ஜனதாக் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளமையினால், வெளிநாட்டு பிரச்சினைகளில் உறுதியான செயற்பாடுகளை எடுக்க முடியும் என பிரபல வழக்கறிஞரும், அந்தக் கட்சியின் முன்னாள் உறுப்பினருமான ராம் ஜெத்மலானி தெரிவித்துள்ளார்.

இலங்கை பிரச்சினை குறித்து பாரதீய ஜனதாக் கட்சியின் நிலைப்பாடு தொடர்பில் ‘த ஹிந்து’ பத்திரிகைக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைத் தமிழர்களுக்கும், பாரதீய ஜனதாக் கட்சிக்கும் இடையில் நீண்ட கால உறவு இருப்பதாக ராம் ஜெத்மலானி தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில், இனப் பிரச்சினைக்கான சுமூகத் தீர்வைப் பெற்றுக்கொடுக்க பாரதீய ஜனதாக் கட்சி நடவடிக்கை எடுக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கம், இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகளை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை என ராம் ஜெத்மலானி ‘த ஹிந்து’விற்கு சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த வழக்கு மீதான விசாரணைகள் உச்ச நீதிமன்றத்தில் உள்ளதாகவும், இந்த பிரச்சினைக்கு சிறந்த தீர்ப்பொன்று பெற்றுக்கொடுக்கப்படும் என தான் எதிர்பார்ப்பதாகவும் பாரதீய ஜனதாக் கட்சியின் முன்னாள் உறுப்பினருமான ராம் ஜெத்மலானி தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்