ரயில் சாரதி மீது அளவ்வ ரயில் நிலையத்தில் தாக்குதல்

ரயில் சாரதி மீது அளவ்வ ரயில் நிலையத்தில் தாக்குதல்

எழுத்தாளர் Staff Writer

20 May, 2014 | 9:11 am

மஹவயில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலொன்றின் சாரதி மீது அளவ்வ ரயில் நிலையத்தில் பயணிகள் சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

குறித்த ரயில் தாமதமடைந்துள்ளதாக தெரிவித்து அதன் சாரதி தாக்கப்பட்டதுடன், ரயில் போக்குவரத்துக்கு தடை ஏற்படுத்தப்பட்டதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவிக்கின்றது.

இதற்கமைய ரயில் சேவையை தொடர முடியாதுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையத்தின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்