பாண்டிராஜ் படத்தில் மீண்டும் சிவகார்த்திகேயன்

பாண்டிராஜ் படத்தில் மீண்டும் சிவகார்த்திகேயன்

பாண்டிராஜ் படத்தில் மீண்டும் சிவகார்த்திகேயன்

எழுத்தாளர் Staff Writer

20 May, 2014 | 12:01 pm

சிவகார்த்திகேயனின் வெற்றி படங்களான “மெரினா”, “கேடி பில்லா கில்லாடி ரங்கா” ஆகியவற்றை இயக்கிய பாண்டிராஜ், தற்போது அவரின் அடுத்த படத்தை இயக்கவுள்ளார்.

தனது முதல் படமான ‘பசங்க’ வெற்றிக்கு பிறகு அவர் இயக்கிய வம்சம், மெரினா போன்ற படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி தரவில்லை என்றாலும், சிவகார்த்திகேயனை நாயகனாக்கிய பெருமையை பெற்றார்.

தற்போது முன்னணி நாயகனாக இருக்கும் சிவகார்த்திகேயன், ஒரே நேரத்தில் பல படங்களில் நடித்து வருகிறார். இருப்பினும் பாண்டிராஜிடம் கதையை கேட்ட அவர் அதில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதாக தெரியவருகிறது.

அதே நேரத்தில் சிம்புவின் ‘இது நம்ம ஆளு” படத்தை இயக்கி வரும் பாண்டிராஜ், அது முடிந்தவுடன் சிவகார்த்திகேயனின் படத்தை ஆரம்பிப்பார் என குறிப்பிடப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்