நம்பிக்கையில்லாப் பிரேரணை மூலம் இடம்பெறுவது என்ன?

நம்பிக்கையில்லாப் பிரேரணை மூலம் இடம்பெறுவது என்ன?

எழுத்தாளர் Bella Dalima

20 May, 2014 | 10:26 pm

நம்பிக்கையில்லாப் பிரேரணை மூலம் இடம்பெறுவது என்ன?

இது குறித்து ஜனாதிபதி சட்டத்தரணி ஜயம்பத்தி விக்ரமரத்ன விளக்கமளித்தார்.

[quote]நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்று கொண்டுவரப்பட்டால், அது பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட வேண்டும்.  சபைக்கு பிரசன்னமாகியுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பான்மையினரை அடிப்படையாக வைத்தே இந்த நம்பிக்கையில்லா பிரேரணை ஏற்றுக் கொள்ளப்படும். அல்லது நிராகரிக்கப்படும்.

நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்று நிறைவேற்றப்பட்டால் அல்லது வரவு செலவு திட்டம் தோல்வியடைந்தால் அல்லது அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் பாராளுமன்றத்தில் தோல்வியடைந்தால், அரசாங்கத்தின் தலைவராகவுள்ள ஜனாதிபதி பதவியிழக்கமாட்டார். மாறாக பிரதமரும் அமைச்சரவையுமே பதவியிழக்க வேண்டி ஏற்படும். 49ஆம் சரத்தில் இது தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

அதன்பின்னர் புதிய பிரதமரையும், அமைச்சரவையையும் ஜனாதிபதியே நியமிக்க வேண்டும். பாராளுமன்றத்தின் நிலைப்பாடு வேறாக  இருப்பினும், வேறு எதனையும் செய்ய முடியாது. தொடர்ந்தும் அதே ஜனாதிபதியே பதவியில் இருப்பார். பாராளுமன்றத்தை எவ்வேளையிலும் கலைப்பதற்கான அதிகாரம் ஜனாதிபதியிடம் உள்ளது.

தற்போதைய பாராளுமன்றத்தில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 144 ஆசனங்களையும் ஐக்கிய தேசிய கட்சி 60 ஆசனங்களையும், இலங்கைத் தமிழரசு கட்சி 14 ஆசனங்களையும், ஜனநாயக தேசிய கூட்டமைப்பு 7 ஆசனங்களையும்,  கொண்டுள்ளன.

ஜாதிக ஹெல உறுமய, தேசிய சுதந்திர முன்னணி மற்றும் சில இடதுசாரி கட்சிகளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு  அரசாங்கத்தின் பங்காளி கட்சிகளாக உள்ளன.[/quote]

 

 

பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் இந்தக் கட்சிகளின் நிலைப்பாடு  என்ன?

மேலதிகத் தகவல்களைக் காணொளியில் காண்க…

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்