சூர்யாவுடன் ஊதாக் கலரு ரிப்பன்!

சூர்யாவுடன் ஊதாக் கலரு ரிப்பன்!

சூர்யாவுடன் ஊதாக் கலரு ரிப்பன்!

எழுத்தாளர் Bella Dalima

20 May, 2014 | 5:20 pm

சூர்யா ‘அஞ்சான்’ படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக வெங்கட் பிரபு படத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்தப் படத்தில் தான் சூர்யாவுக்கு ஜோடியாக நயன்தாராவும், எமி ஜாக்சனும் நடிக்கின்றனர்.

இதில் இரண்டு நாயகிகள் மட்டும் கிடையாதாம். மூன்றாவதாக ஒரு நாயகியும் இணைந்துள்ளாராம்.

அவர் வேறு யாருமில்லை, ‘ஊதாக் கலரு ரிப்பன்’  ஸ்ரீதிவ்யா தானாம்.

இதற்காக ஸ்ரீதிவ்யாவுக்கு ரூ.40 இலட்சம் சம்பளம் பேசப்பட்டுள்ளதாம்.

தற்போது தமிழ் திரைப்பட உலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஸ்ரீதிவ்யா, இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷுடன் பென்சில், சிவகார்த்திகேயனுடன் டாணா, விஷ்ணுவுடன் ஜீவா, அதர்வாவுடன் ஈட்டி, விதார்த்துடன் காட்டு மல்லி, புதுமுக நடிகருடன் நகர்ப்புறம் ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்