சவுக்கடி கடற்பகுதியில் இராட்சத சுறா சிக்கியது (வீடியோ)

சவுக்கடி கடற்பகுதியில் இராட்சத சுறா சிக்கியது (வீடியோ)

எழுத்தாளர் Bella Dalima

20 May, 2014 | 4:56 pm

ஏறாவூர் – சவுக்கடி கடற்பகுதியில் இழுவை வலை ஒன்றில் சுமார் 2500 கிலோ கிராம் எடையுடைய இராட்சத சுறா மீன் ஒன்று சிக்கியுள்ளது.

புலிச் சுறா ரகத்தைச் சேர்ந்த இந்த மீன், 16 அடி நீளமுடையது.

இந்த பிரதேசத்தில் சமீப காலங்களில் சிக்கிய மிகப் பெரிய மீன் இது என்பது குறிப்பிடத்தக்கது.

வெண் புள்ளிகளைக் கொண்ட குறிப்பிட்ட சுறா மீன், இழுவை வலையில் அகப்பட்டமையினால் மிகவும் சிரமத்துடன் அதனை கரை சேர்த்ததாக மீனவர்கள் தெரிவித்தனர்.

இந்த மீனைப் பார்வையிட பலர் சவுக்கடி கடற்கரைக்கு வந்திருந்தபோதிலும் துண்டு துண்டாக வெட்டப்பட்டு குறித்த மீன் விற்பனை செய்யப்பட்டது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்