இலங்கை – இங்கிலாந்து கிரிக்கெட் தொடர்; முதல் போட்டி இன்று

இலங்கை – இங்கிலாந்து கிரிக்கெட் தொடர்; முதல் போட்டி இன்று

இலங்கை – இங்கிலாந்து கிரிக்கெட் தொடர்; முதல் போட்டி இன்று

எழுத்தாளர் Staff Writer

20 May, 2014 | 9:51 am

இங்கிலாந்துக்கு கிரிக்கெட் விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி தொடரின் முதலாவது சர்வதேச இருபதுக்கு-20 போட்டியில் இங்கிலாந்து அணியுடன் மோதவுள்ளது.

உலகக் கிண்ண இருபதுக்கு இருபது தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்தமை, இன்றைய போட்டிக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என இலங்கை இருபதுக்கு-20 கிரிக்கெட் அணித்தலைவர் லசித் மாலிங்க தெரிவிக்கின்றார்.

அணி என்ற ரீதியில் திறமையை வெளிப்படுத்துவது மிகவும் முக்கியமானதொன்று என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உலகக் கிண்ண இருபதுக்கு-20 தொடரை வெற்றி கொண்டதன் பின்னர் இலங்கை அணி பங்கேற்கவுள்ள முதலாவது சர்வதேச போட்டி இது வென்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இலங்கைக்கு எதிரான போட்டிகளுக்கான பயிற்சிகளின் போது, புதிய உதவி பயிற்றுவிப்பாளர் போல் பாப்ரேஸ் அதிக ஒத்துழைப்பு வழங்கியதாக இங்கிலாந்து அணித் தலைவர் இயன் மோகன் தெரிவித்துள்ளார்.

இன்றைய போட்டியில் திறமையை வெளிப்படுத்தி வெற்றிபெறுவதே தமது அணியின் நோக்கம் என அவர் குறிப்பிட்டுள்ளார்

இந்தப் போட்டி இலங்கை நேரப்படி இன்று இரவு 10.30 மணிக்கு கெனிங்டன் ஓவல் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்