வழமைக்குத் திரும்பியது வட மார்க்க ரயில் சேவை (Video)

வழமைக்குத் திரும்பியது வட மார்க்க ரயில் சேவை (Video)

எழுத்தாளர் Staff Writer

19 May, 2014 | 1:22 pm

வடக்கு ரயில் மார்க்கத்தில் தடைப்பட்டிருந்த போக்குவரத்து வழமைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்தது.

பொத்துஹரவுக்கும் பொல்கஹவெலவுக்கும் இடைப்பட்ட பகுதியில் ரயிலொன்றில் இன்று காலை இயந்திர கோளாறு ஏற்பட்டதால் வடக்கு ரயில் மார்க்கத்தின் ஊடான ரயில் போக்குவரத்து தடைப்பட்டது.

பொத்துஹரவில் அண்மையில் இடம்பெற்ற விபத்தில் சிக்கிய ரயிலின் பாகங்களை, அனர்த்த நிவாரண ரயிலில் கொண்டு வந்த வேளையில் குறித்த ரயிலில் இன்று காலை இயந்திர கோளாறு ஏற்பட்டதாக ரயில்வே கட்டுப்பாட்டுப் பிரிவு குறிப்பிட்டது.

இதனால் கொழும்பிலிருந்து பளை மற்றும் மட்டக்களப்பு வரையான ரயில் சேவைகள் தடைப்பட்டதுடன் வடக்கு மார்க்கத்தின் ரயில் போக்குவரத்து  கொழும்பிலிருந்து பொல்கஹவல வரை மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.

எவ்வறாயினும், ரயில் சேவைகள் யாவும் தற்போதைக்கு வழமைக்கு திரும்பியுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு பிரிவு குறிப்பிட்டது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்