வளலாய் பகுதியை நாளைமுதல் பார்வையிட முடியுமென்ற தகவல் பொய்யானது – ருவன் வணிகசூரிய

வளலாய் பகுதியை நாளைமுதல் பார்வையிட முடியுமென்ற தகவல் பொய்யானது – ருவன் வணிகசூரிய

வளலாய் பகுதியை நாளைமுதல் பார்வையிட முடியுமென்ற தகவல் பொய்யானது – ருவன் வணிகசூரிய

எழுத்தாளர் Staff Writer

19 May, 2014 | 7:26 pm

யாழ். பலாலி அதியுயர் பாதுகாப்பு வலயத்திற்குட்பட்ட வளலாய் பகுதியில் தெரிவுசெய்யப்பட்டுள்ள காணிகளை அளவிடும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு பகிர்ந்தளிப்பதற்காக சுமார் 230 ஏக்கர் நிலப்பரப்பு தயார் செய்யப்பட்டு வருவதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய நியூஸ் பெஸ்ட்டுக்கு தெரிவித்தார்.

ருவன் வணிகசூரிய நியூஸ் பெஸ்ட்டுக்கு தெரிவித்த கருத்து
[quote]பலாலி இராணுவ முகாமிற்கு சமீபமாகவுள்ள வளலாய் பகுதியில் சுமார் 230 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பு காணியை இடம்பெயர்ந்த மக்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கை சில மாதங்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட்டது. இருந்த போதிலும் இந்த பகுதி காடாகி காணப்பட்டமையால் அதனை உரிய முறையில் அளவீடு செய்ய முடியாமல் போயிருந்தது. ஆகவே இராணுவ பொறியியல் பிரிவினரால் குறித்த காணி சுத்தம் செய்யப்பட்டு தற்போது காணி அளவிடும் நடவடிக்கைகள் ஆரம்பிக்க்பட்டுள்ளன. காணி அளவிடும் நடவடிக்கை நிறைவடைந்த பின்னர் இடம்பெயர்ந்துள்ளவர்களில் தெரிவு செய்யப்பட்டுள்ளவர்களை மீள் குடியேற்றுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.[/quote]

இதேவேளை, வளலாய் பகுதியை நாளைமுதல் மக்கள் பார்வையிட முடியும் என வெளியாகியுள்ள தகவல் முற்றிலும் பொய்யானது எனவும் இராணுவ ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.
[quote]
வளலாய் பகுதியை பார்வையிடுவதற்கு நாளை முதல் மக்களுக்கு சந்தர்ப்பம் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த பிர்சாரம் முற்றிலும் பொய்யானது. காணியை பார்வையிடுவதற்கு ஏற்கனவே சந்தர்ப்பம் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டது. இருப்பினும் தற்போது காணி அளவிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் அதற்கு பாதிப்புகள் ஏற்படக் கூடும் என்பதால் காணிகளை பார்வையிட முடியாது. காணி அளவிடும் பணிகள் நிறைவடைந்ததன் பின்னரே அதற்கான வாய்ப்பு கிட்டும்.[/quote]


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்