வனராஜா தோட்டத்தில் குளவித் தாக்குதல்; அறுவர் வைத்தியசாலையில் அனுமதி (Video)

வனராஜா தோட்டத்தில் குளவித் தாக்குதல்; அறுவர் வைத்தியசாலையில் அனுமதி (Video)

எழுத்தாளர் Staff Writer

19 May, 2014 | 5:17 pm

டிக்கோயா வனராஜா தோட்டத்தில் ஆறு பேர் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

குளவிக்கொட்டுக்கு இலக்கானவர்கள் இன்று பிற்பகல் இரண்டு மணியளவில் டிக்கோயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

குளவிக் கொட்டுக்கு இலக்கான நான்கு பெண்களும், இரண்டு ஆண்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

டிக்கோயா வனராஜா தோட்டத்தை சேர்ந்த தோட்டத் தொழிலாளர்களே குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்