லிபிய பாராளுமன்றக் கட்டத்திற்கு வெளியே கடுமையான துப்பாக்கிப் பிரயோகம்

லிபிய பாராளுமன்றக் கட்டத்திற்கு வெளியே கடுமையான துப்பாக்கிப் பிரயோகம்

லிபிய பாராளுமன்றக் கட்டத்திற்கு வெளியே கடுமையான துப்பாக்கிப் பிரயோகம்

எழுத்தாளர் Staff Writer

19 May, 2014 | 9:59 am

லிபிய தலைநகர் ரிப்போலியிலுள்ள பாராளுமன்றத்திற்கு வெளியே கடுமையான துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றுள்ளது.

ஆயுததாரிகள் பாராளுமன்றக் கட்டத்தை தாக்க ஆரம்பித்ததை அடுத்து பாராளுமன்ற உறுப்பினர்கள் அங்கியிருந்து வெளியேறியுள்ளனர்.

மோசமான அதிகாரியாக கருதப்படும் கலிபா ஹப்டாரின் ஆதரவாளர்களே இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதாக அந்த நாட்டுத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

கிழக்கு பென்ஹாசி நகரில் அரசாங்கம் விமானம் பறப்பதற்கு தடை செய்யப்பட்ட வலயத்தை பிரகடனப்படுத்தியதை அடுத்து அவரின் படையினர் விமான மற்றும் தரைவழித் தாக்குதல்களை அந்தப் பகுதியில் நடத்தியிருந்தனர்.

லிபியாவின் சில பகுதிகளைக் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஆயுதக் குழுக்களை கட்டுப்படுத்துவதில்  அந்த நாட்டு அரசாங்கம் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்